மதுகுற்றம் புரிந்து மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு உதவியாக விலையில்லா ஆடுகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்

புதன்கிழமை, 8 மார்ச் 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மதுகுற்றம் புரிந்து மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு உதவியாக விலையில்லா ஆடுகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தெரிவிக்கும் போது: தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பாக மதுக்குற்றம் புரிந்து மனம் திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்விற்காக 2016-2017-ம் நிதி ஆண்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 31.40 இலட்சங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தகுதி வாய்ந்த 105 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 21 பயனாளிகளுக்கு தலா ரூ.30000- மதிப்பில் விலையில்லா ஆடுகள் இன்று வழங்கப்படுகிறது. இந்த ஆடுகளை நன்கு வளர்ந்து இன பெருக்கம் செய்து பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைவேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சூ.கிருஷ்டி, கிருஷ்ணகிரி உதவி ஆணையர் (ஆயம்) மு.முருகேசன், தருமபுரி மாவட்ட பால் உற்த்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.என்.ஏ. கேசவன், கோட்ட ஆய அலுவலர்கள்; கு.கன்னியப்பன், மு.பிரேம்நசீர், ஆயத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: