Idhayam Matrimony

கண்காணிப்பு செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு செயலாளர் ககன்தீப் சிங் பேடி, , தலைமையில் கலெக்டர் டி.பி.ராஜேஷ், , முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு செயலாளர் , கடலூர் மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் விடுபடாமல் இடுபொருள் உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் சேரவேண்டும் எனவும், வறட்சியால் குடிநீர் பிரச்சனை நிலவி வருவதால் பிரச்சனைகளை உடனடியாக நிவர்த்தி செய்து குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், கால்நடைகளுக்கான உலர் தீவன கிடங்கை விரைவாக தொடங்கி உலர் தீவனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை விரைந்து குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவேண்டும் எனவும், சுங்கச்சாலை பணிகளை விரைந்தும் தரமாகவும் முடிக்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு மழை தூவுவான் (சுயin பரn) கருவி வழங்கும் இலக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.ஆனந்தராஜ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் மோகன், வேளாண் இணை இயக்குநர் ஆர்.எஸ்.மனோகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயலட்சுமி, கிருபாகரன், துணை ஆட்சியர் (நிலஎடுப்பு) நெய்வேலி உமாமகேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ராமமூர்த்தி, கண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராஜாமணி, மீன்வளத்துறை துணை இயக்குநர், நகராட்சி ஆணையர்கள், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago