முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்டத்தில் சுரங்க தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள ஆலோசனைக் கூட்டம் : கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 9 மார்ச் 2017      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சுண்ணாம்பு கல் சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நுரையீரலில் ஏற்படக்கூடிய சிலிக்கோசிஸ் மற்றும் தொழில் சார்ந்த நோய்கள் கண்டறியும் பொருட்டு அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புகல் சுரங்க குத்தகைத்தாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்தாவது:- அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சுண்ணாம்புகல் சுரங்க நிறுவனத்தினர் மற்றும் குத்தகைதாரர்கள் கலந்து கொண்டனர். பணிபுரியும் பணியாளர்களின் தகவல்களை நிறுவனங்கள் வாரியாக உடனடியாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணியாளர்கள் தகவல்கள் பெறப்பட்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட அட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், உதவி இயக்குநர் (சுரங்கம்) சரவணன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், சுரங்க நிர்வாகிகள், குத்தகைத்தாரர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்