முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வனத்துறையில் வனக்காவலர் பணி

வெள்ளிக்கிழமை, 10 மார்ச் 2017      நீலகிரி

வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர் பணியிடத்திற்கு ஆதிவாசி பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பாக நீலகிரி வடக்கு கோட்ட மாவட்ட வன அலுவலர் கலாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                   6 பணியிடம்

தமிழ்நாடு வனத்துறை நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஆறு வனக்காவலர் பணியிடங்களை ஆதிவாசி பழங்குடியினரைக் கொண்டு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி.தேர்ச்சியும், ஆண்கள் குறைந்த பட்சம் 152 செ.மீஉயரம் பெண்கள் 145 செ.மீஉயரம் இருக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பளவு 79 செ.மீ.இருக்க வேண்டும்.01.01.2017 அன்று 35 வயது பூர்த்தியாமல் இருக்க வேண்டும்.

                               தகுதியுடையவர்கள்

மேற்குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் தங்களது சுய ஒப்பமிட்ட கல்விச்சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அட்டை சான்று, புகைப்படம், சுயவிலாசமிட்ட அஞ்சல் உறை ஆகியவற்றுடன் மாவட்ட வன அலுவலர், நீலகிரி வடக்குக்கோட்டம், ஊட்டி என்ற முகவரிக்கு வரும் 30_03.2017_க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்