கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி அமைச்சர் எம்.சி.சம்பத் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 12 மார்ச் 2017      கடலூர்

கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் , கலெக்டர்டி.பி.ராஜேஷ், தலைமையில், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியில் மறைந்த முதலமைச்சர் அம்மா தொடங்கி வைத்த அரசு திட்டங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பதவியேற்பு உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டன. பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்தனர்.இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆவின் துணைத்தலைவர் செல்வராஜ், தொரப்பாடி பேரூராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் கனகராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் என்.டி.கந்தன், முன்னாள் உள்ளாட்சி பிரநிதிகள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சத்தியசீலன், பண்ருட்டி வட்டாட்சியர் விஜய் ஆனந்த், தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: