கடலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 14 மார்ச் 2017      கடலூர்

கடலூர் மாவட்ட போக்குவரத்துத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர்டி.பி.ராஜேஷ், தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.இக்கருத்தரங்கில் கலெக்டர் தெரிவித்ததாவது,கடலூர் மாவட்டத்தில் 2015ம் ஆண்டு உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துக்களின் எண்ணிக்கை 522, உயிரிழப்பு இல்லாத விபத்துக்களின் எண்ணிக்கை 3946. 2016ம் ஆண்டு உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துக்களின் எண்ணிக்கை 506, உயிரிழப்பு இல்லாத விபத்துக்களின் எண்ணிக்கை 3858. இதில் 2015 ம் ஆண்டைவிட 2016ம் ஆண்டில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அனைத்து தொடர்புடைய அலுவலர்களும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தி கடலூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கலெக்டர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.இதற்காக சாலை பாதுகாப்பு குறித்து தீவிர கண்காணிப்பு வேண்டும். சாலை விதிகளை மதிக்கவும், பழுதற்ற வாகனங்களை இயக்கவும், ஹெல்மெட் அணிய அறிவுறுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சாலை பாதுகாப்பினை மேம்படுத்த தேவையான கருத்துருக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தால் அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விபத்தில் ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தின் எதிர்காலமே முடங்கிவிடும் என்பதால் சாலை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு தீவிரமாக எடுத்து சொல்லவேண்டும் எனத் தெரிவித்து கடலூர் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2016 வரை தணிக்கை செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 30936, தணிக்கை அறிக்கை வழங்கிய வாகனங்களின் எண்ணிக்கை 6948, சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2102, வசூலிக்கப்பட்ட அபராத கட்டணம் ரூ.1.77 கோடி, விபத்தின்போது உயிரிழப்பு ஏற்படுத்திய ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்தானதின் எண்ணிக்கை 39, தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ள ஓட்டுநர் உரிமங்களின் எண்ணிக்கை 51 போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இக்கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குறித்து பவர் பாய்ன்ட் மூலம் அலுவலர்களுக்கு விளக்கப்பட்டது. அலுவலர்கள் சாலை பாதுகாப்பினை தங்கள் துறை மூலம் மேம்படுத்துவது தொடர்பான கருத்துக்களை இக்கருத்தரங்கில் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து வரவேற்புரையாற்றினார். இக்கருத்தரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம், அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: