முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது: மாயாவதி குற்றச்சாட்டு

புதன்கிழமை, 15 மார்ச் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்தரப் பிரதேசத்தில் பாஜக மோசடி செய்து, நேர்மையற்ற முறையில் வெற்றி பெற்றுள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிகை மார்ச் 11-ம் தேதி எண்ணப்பட்டது. இதில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 312 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாதிக்கு 47 இடங்களும் காங்கிரசுக்கு 7 இடங்களும் கிடைத்தன. பகுஜன் சமாஜ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

தேர்தல் ஆணையம்
இந்த வெற்றியின் மூலம் பாஜக உத்தரப் பிரதேசத்தில் வரலாற்று சாதனை படைத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது. மறு வாக்குபதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால், மாயாவதியின் வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இந்த நிலையில் உத்தரப் பிரதேச தேர்தல் பாஜக வெற்றி குறித்து மாயாவதி நேற்று கூறியபோது., உத்தரப் பிரதேசத்தில் பாஜக நேர்மையற்ற முறையில் மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்று குற்றம் சாட்டினார். கோவா மற்றும் மணிப்பூரில் பணபலத்தின் மூலம் ஆட்சியை பாஜக திருடியுள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்