முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீ குரு முத்தீஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா

வியாழக்கிழமை, 16 மார்ச் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மர்கம் அருகில் உள்ள ஸ்ரீ குரு முத்தீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய ஜீர்னோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோபூஜை

விழாவை முன்னிட்டு மார்ச் 2 ஆம் தேதி பந்தக்கால்,12 ஆம் தேதி அனுக்நை,விக்னேஸ்வர பூஜை,கோபூஜை,தனபூஜை,ஸ்ரீ மஹா கணபதி ஹோமம்,நூதன பிம்பங்கள் கரிகோலம் நூதன பிம்பங்களுக்கு கண் திறத்தல், அஷ்டா தசக்கியை, பிரவேசபலி,வாஸ்து சாந்தி,ரஷோக்ன ஹோமம், மிருத்சங்கிரகணம்,பிம்ப பிரதிஷ்டை,13 ஆம் தேதி ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம்,ஸ்ரீ நவக்கிரக ஹோமம்,பூர்ணாஹீதி திபாராதனை,அஷ்டபந்தனம் சாத்துதல், அங்குரார்ப்பணம், தஷாப்பந்தனம் காப்புகட்டுதல்,14 ஆம் தேதி அஸ்திர ஹோமம்,தீர்த்த சங்கிரஹணம்,அக்னி சங்கிரஹண்,யாக அலங்காரம்,கும்பாலங்காரம், கலாகர்ஷணம்,முதற்கால யாக பூஜை,திரவ்ய ஹோமம்,பூர்ணாஹீதி திபாராதனை நடைபெற்றது.

15 ஆம் தேதி விஷேஷ சாந்தி,இரண்டாம் காலயாக பூஜை,நாடிசந்தானம்,தத்வார்ச்சனை,தீபாராதனை நடைபெற்றது.மலையில் பன்னிரு திருமுறை விழிபாட்டு மன்ற சிவன் அடியார்களால் திருமுறை நடைபெற்றது.மார்ச் 16 ஆம் தேதி மஹா பூர்ணாஹீதி திபாராதனை,கலசங்கல் புறப்பாடு நடைபெற்று மஹா கும்பாபிஷேக விழா காலை 11 மணி அளவில் ஸ்ரீ குரு முத்தீஸ்வரர் ஸபரிவார சஹிதம் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.பின்னர் கும்ப கலசங்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை திருக்கல்யாண நிகழ்ச்சியும்,ஸ்ரீ குரு முத்தீஸ்வரர்,அம்மாள் புஷ்ப அலங்காரத்தில் வாத்தியங்கள், வாண வேடிக்கை முழங்க திருவீதி உலா நடைபெற்றது. அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி எஸ்.ரங்கன், திருப்பணிகுழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்