முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாங்கண்ணி சிறப்புநிலைப் பேரூராட்சியில் ரூ.33.51 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை : அமைச்சர் மணியன் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்புநிலைப் பேரூராட்சியில் ரூ.33.51 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையினை மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார்.

 

பாதாள சாக்கடை பணி

 

இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, புரட்சித் தலைவி அம்மா ஆசியுடன் வேளாங்கண்ணி சிறப்புநிலைப் பேரூராட்சியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் ரூ.33.51 கோடியாகும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஒப்புதல் ரூ.27.92 கோடியாகும். இத்திட்டம் தொடங்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் " என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், நிர்வாகப்பொறியாளர்(பாதாள சாக்கடைத் திட்டம்) மாணிக்கம், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் செல்வம், பழனிசாமி, இளநிலைப் பொறியாளர்கள் விஜயகுமார் , அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்