முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்க கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

சனிக்கிழமை, 18 மார்ச் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக 2016-17 ஆண்டுக்கான ஆட்சி மொழிப் பயிலரங்கக் கருத்தரங்கத்தின் இறுதிநாள் நிகழ்ச்சி கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக 2016-17 ஆண்டுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கம் இரண்டு நாட்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் இறுதி நாளான இன்று இக்கருத்தரங்கில் நான் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நம் தாய்மொழியான தமிழ் மொழி தொன்றுதொட்ட சிறப்பு வாய்ந்த மொழியாகும். நம் அனைவருக்கும் தமிழ் மொழி மீது பற்று கொண்டு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உரிய தொண்டாற்ற வேண்டும். அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தமிழ் மொழியில் கோப்புகள் மற்றும் படிவங்களை கையாள வேண்டும். அலுவலக நடைமுறைகளான குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள், ஆட்சி மொழி செயலாக்கம் மற்றும் ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழி சட்டம், மொழிப்பயிற்சி, ஆட்சி மொழி ஆய்வு குறை களவு நடவடிக்கைகள் மொழி பெயர்ப்பு, கலை சொல்லாகம் என தமிழ் மொழி ஆய்வுகளை தெளிவாக மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து, ஆட்சி மொழித் திட்டத்தில் 2014-2015ஆம் ஆண்டுகளில் சிறந்து விளங்கிய அலுவலர்களுக்கு கேடயங்களை உலக தமிழ்வளர்ச்சி நிறுவன இயக்குநர் மற்றும் தமிழ்வளர்ச்சி இயக்குநர் (பொ) .கோ.விசயராகவன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் .ச.மகாவிஷ்ணு, தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் மற்றும் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) .துரை.தம்புசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நி.சிவகுரு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்