ஆரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு நலதிட்ட உதவிகள்:அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017      திருவண்ணாமலை
a MINISTER

 

ஆரணி அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிமுக சார்பில் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார். ஆரணி அருணகிரிசத்திரம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் முன்னிட்டு அதிமுக சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகளான ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலை, 500 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா உள்ளிட்டவைகளை வழங்கினார். இவ்விழாவில் செய்யார் எம்எல்ஏ தூசி கே.மோகன், பாசறை நிர்வாகி அகிலேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர்கள் க.சங்கர், அ.கோவிந்தராசன், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்ட செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், மாவட்டதுணை செயலாளர்கள் டி.கருணாகரன், ரமணிநீலமேகம், நிர்வாகிகள் சேகரபாண்டியன், ஜோதிலிங்கம், வேலாயுதம், குமரன், உதயசங்கர், பையூர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: