கிணறுதோண்டும்போது மணல்சரிந்து ஒருவர் பலி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2017      ராமநாதபுரம்
selvaraj 2

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே கிணறுதோண்டும்போது மணல்சரிந்து ஒருவர் பலியானார்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது சண்முகவேல்பட்டிணம். இந்த ஊரைச்சோந்தவர் முனியசாமி என்பவரின் மகன் குமார்(வயது38). மங்களுரில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரின் வீட்டில் கிணற்றினை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. மொங்கான்வலசையை சேர்ந்த செல்வராஜ்(45), வேதகாரவலசையை சேர்ந்த வேலுச்சாமி(55), மொட்டிவலசையை சேர்ந்த முருகேசன்(39), காக்கையன்வலசை முத்து(56) ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனா. கிணற்றில் இருந்த உறைகளில் சிலவற்றை எடுத்துவிட்டு மணலை அகற்றி ஆழப்படுத்தி மீண்டும் உறைகளை இறக்கி கொண்டிருந்தனர். முத்து மேலே நின்று கொள்ள மற்றவர்கள் கிணற்றுக்குள் இறங்கி உறைகளை வாங்கி பொருத்தி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று பக்கவாட்டில் இருந்து மணல் சரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலுச்சாமி, முருகேசன் ஆகியோர் ஒருவழியாக திணறியபடி மேலே ஏறி வந்துள்ளனர். ஆனால், செல்வராஜால் உடனடியாக மணல் குவியலை விளக்கிவிட்டு மேலே வரமுடியவில்லை. இதன்காரணமாக மணல் முழுவதும் செல்வராஜ் மீது விழுந்து மூழ்கடித்தது.

     இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று செல்வராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி எந்திரம் கொண்டுவரப்பட்டு குழி தோண்டி தீயணைப்பு வீரர்களின் முயற்சிக்கு பின்னர் இறந்த நிலையில் செல்வராஜின் உடலை மீட்டனர். இவருக்கு சுந்தரி என்ற மனைவியும் சபரிதாசன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். கிணறுதோண்டும்போது மணல்சரிவு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: