முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஷ்கோடி கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 250 கிலோ டால்பின்.

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,-   தனுஷ்கோடி கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் மீனை மண்டபம் வனச்சரக அதிகாரிகள் நேற்று கைப்பற்றினர். 

     மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ் கடலில் பாறைகளில் டால்பின், ஓங்கி மீன்,கடல்பசு,கடல்ஆமை,கடல்பன்றி,கடல் பாம்பு உள்பட நூற்றுக்காணக்கான அரியவகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.இந்த வகையான உயிரினங்கள் இறை தேடி அப்பகுதியிலிருந்து வெளி வரும்போது மீன்பிடி படகுகள்,கப்பல்கள் போன்றவற்றில் மோதி காயமடைந்து விடுகின்றனர்.அப்படி காயமடையும் மீன்கள் குறிப்பிட்ட நாட்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கின்றன. இந்த நிலையில் தனுஷ்கோடி அர்ச்ச்ல் முனை கடல் பகுதியில் நேற்று அதிகாலையில் இறந்த நிலையில் டால்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியது.இது குறித்து அப்பகுதி மீனவர்கள் மண்டபம் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பின்னர் வனச்சரக அதிகாரி சதீஸ் தலைமையில் அதிகாரிகளும்,வேட்டை தடுப்பு காவலர்களும் அப்பகுதிக்கு வந்தனர்.பின்னர் கரை ஒதுங்கி கிடந்த டால்பின் மீனை கைப்பற்றி சோதணை செய்தனர்.அப்போது அந்த மீன் சுமார் 250 கிலோ எடையளவும்,8 அடி நீளத்திலும், 5 அடி சுற்றளவிலும் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சோதனைக்கு பின்னர் டால்பினை அப்பகுதியிலேயே அதிகாரி்கள் மணலில் புதைத்தனர்.                                                   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்