முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாவக் கொல்லையில் மனுநீதி நாள் முகாம்

புதன்கிழமை, 22 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

தி.மலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் நாவக்கொல்லையில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. தாசில்தார் சஜேஷ்பாபு வரவேற்றார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தால் முன்னிலை வகித்தார். அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் துறையில் மூலம் செயல்படுத்தபடும் திட்டங்கள் பற்றியும் அவற்றை பெற மக்கள் மேற்கொள்ளவேண்டிய வழி முறைகளை பற்றியும் விபரமாக விளக்கி கூறினார்கள். முகாமில் மொத்தம் 809 மனுக்கள் பெறப்பட்டு 274 மனுக்களுக்கான நலதிட்டங்கள் வழங்கப்பட்டது.பரிசீலனையில் 300 மனுக்கள் உள்ளது. தக்க ஆவணங்கள் இல்லை என கூறி 235 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் 133 குடும்பங்களுக்கு மளையாளி எஸ்டி சான்றிதழ் வழங்கியும் முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி டிஆர்ஓ பழனி பேசியதாவது: இந்த முகாமிற்கு அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டது மகிழ்சியாக உள்ளது.உங்கள் குறைகளை தீர்த்து வைக்கவே இநத் சிறப்பு முகாம் நடக்கிறது. வனத்துறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வனத்துறையிடம் பேசியுள்ளது. இங்கு சமுதாய கூடம்,லைபரரி மற்றும் பஸ்வசதி உள்ளிட்ட வசதிகளை கேட்டுள்ளனர். விரைவில் அவைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.| மேலும் கேஸ் சிலிண்டர் இல்லாத குடும்பஙகளுக்கு அவை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குழந்தை பிறந்த இடத்திலேயே சர்டிபிகேட்டை கேட்டு வாங்குவது முக்கியம். சொத்துக்கள் வாங்கும் போது சரிபார்த்து வாங்குங்கள். பட்டா மாறுதலுக்கு மக்கள் கணனி மையத்திற்கு செல்லுங்கள்.எந்த அரசு வேலைக்கும் எந்த புரோக்கரையும் நாடாதீர்கள். அதே போல் கஷ்டபட்டு சம்பாதிக்கும் பணத்தை அதிக வட்டிக்கு ஆசைபட்டு தனியார் நிதிநிறுவனத்திற்கு சென்று ஏமாறாமல் வங்கிக்கு செல்லுங்கள். குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை அவசியம் இணைத்திடுங்கள். உங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். எனறு பேசினார். முகாமில் ஆர்ஐ சம்சத்பேகம்,விஏஓக்கள் சிவலிங்கம், பாக்யராஜ், விஜயராஜ், வெங்கடாசலம், ஏழுமலை, முத்து மற்றும் சம்பத் உள்ளிட்ட முன்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago