முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 22 மார்ச் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (22.03.2017) முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. முன்னாள் படைவீரர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தெரிவித்ததாவது. தாய் திருநாட்டினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பதினருக்கு தேவையான உதவிகளை செய்வது நம் அனைவரின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கலெக்டர் தலைமையில் அனைத்துறை அலுவலர்களுடன் முன்னாள் படைவீரர்களின் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடத்தப்படுகிறது. இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் முன்னாள் படைவீரர்களிடமிருந்து வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, கல்வித்துறையில் இட ஒதுக்கீடு, வீட்டுமனைப்பட்டா, விவசாய நிலம், சுயதொழில் கடன், விலையில்லா வீடுகள், பட்டா பெயர் மாற்றம் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து பெறப்பட்ட 21 மனுக்களில் 16 மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 மனுக்கள் பரீசிலனையில் உள்ளன. தொடர்ந்து இன்றைய தினமும் முன்னாள் படைவீரர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 25 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பதினருக்கு நாம் அனைவரும் எவ்வாறு முக்கியத்துவம், மதிப்பு அளிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30.11.2016 அன்று நடைபெற்ற கொடிநாள் தினத்தில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான கோலப்போட்டி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு போட்டியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இரண்டாம் பரிசு வருவாய்த்துறை, மூன்றாம் பரிசு தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார். முன்னதாக 2014ம் ஆண்டிற்கான கொடிநாள் வசூல் சேலம் மாவட்டத்திற்கு ரூ.98.08 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் ரூ.1.46 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட ரூ.48 லட்சம் கூடுதலாகும். இந்த சாதனையை பாராட்டி மேதகு தமிழக ஆளுநர் அவர்களால் கலெக்டர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் தி.சங்கீதா அவர்கள் கலெக்டர் வா.சம்பத்திடம், வழங்கினார்கள். இக்கூட்டத்தில் முப்படை வீரர்கள் வாரிய உபதலைவர் பி.பாலசுப்ரமணியன், தாட்கோ மேலாளர் கருணாநிதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல்அமீத், மாவட்ட தொழில் மைய புள்ளிவரை ஆய்வாளர் மு.ச.அப்துல்வஹூத் மற்றும் அரசுத்துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்