முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2017      கடலூர்

கடலூர் நகர கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடலூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேகரிப்பு தொட்டியில் 20.03.2017 அன்று இறங்கி அடைப்பை சரிசெய்யும் போது உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ.10 இலட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் டி.பி.ராஜேஷ், கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினார். கடலூர் நகர கோட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கடலூர் நகராட்சிக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சேகரிப்பு தொட்டியில் 20.03.2017 அன்று இறங்கி அடைப்பை சரிசெய்யும் போது கடலூர் முதுநகர் கொடிகாலக்குப்பத்தை சேர்ந்த வேலு (எ) உத்திரவேலு, அப்புக்குட்டி (எ) ஜெயக்குமார் மற்றும் புதுச்சேரி மாநிலம் சோரியான்குப்பத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ.10 இலட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் உத்திரவேலுவின் தாயார் வனிதா, ஜெயக்குமாரின் தாயார் ஜோதிமணி மற்றும் முருகனின் மனைவி ஜெயா ஆகியோர்களிடம் வழங்கினார்.இந்நிகழ்வில் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,தமிழக அரசின் உத்தரவின்படி, 20.03.2017 அன்று பாதாள சாக்கடை சேகரிப்பு தொட்டியில் இறங்கி அடைப்பை சரிசெய்யும்போது இறந்த மூன்று நபர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.30 இலட்சம் இன்று வழங்கப்பட்டுள்ளது எனவும், தொழில்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் மிக குறுகிய காலத்திற்குள் உரியிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும், கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவண்ணம் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றிலுள்ள அலுவலர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் அணிந்து துப்புரவு பணி மேற்கொள்வது போன்றவை தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் விரைவில் நடத்தப்படவுள்ளது எனவும், கடலூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடையின் வாயில்வழியே மனிதர்கள் இறங்கி கழிவுகளை சுத்தம் செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இந்நிகழ்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கடலூர் நகர கோட்ட நிர்வாக பொறியாளர் சு.மரகதவேலன், உதவி நிர்வாக பொறியாளர் மு.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.சண்முகம் மற்றும் கடலூர் வட்டாட்சியர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்