முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கியாளர்கள் கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் தேவிபாலா ரெசிடென்சி கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கியாளர்கள் கருத்தரங்கம் கலெக்டர் இல.சுப்பிரமணியன்தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் அதிக அளவில் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை கொண்டதாகவும், சிறப்பாக செயல்படுவதில் முதலாவதாக விழுப்புரம் மாவட்டம் திகழ்கிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும,; கந்துவட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டு, சிறுசிறு தொழில் செய்வதற்கு நிதியுதவி பெறவும்,. விழுப்புரம் மாவட்டத்தில் 2016-17ஆம் ஆண்டுகளில் ரூ.300 கோடிகளுக்கு மேல் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி பெற சுய உதவிக்குழுக்களின் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏழை எளிய மகளிர் பயனடைந்துள்ளனர். இதுபோன்ற சுய உதவிக்குழுக்கள் மேலும் முன்னேற்றமடைய வங்கிகள் ஊக்குவிக்க வேண்டுமெனவும், விழுப்புரம் மாவட்டத்தில் 20502 சுய உதவிக்குழுக்களும், 1099 பஞ்சாயத்துகளில் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் மகளிர் சங்கங்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்டம் 17 ஊராட்சி ஒன்றியங்களில் 3 பிரிவுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள 5 ஊராட்சிகளில் புதுவாழ்வு திட்டம் மூலம் வருகிறது. வங்கிகள் மூலம் இத்திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது என கலெக்டர் இல.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் சு.சுந்தரராஜன், முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு உதவி திட்ட அலுவலர் அ.முத்துபாண்டியன், உதவி திட்ட அலுவலர்கள் திருநாவுக்கரசு, பி.குணசேகரன், வி.சித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்