தொழிற்கல்வியால் அனைவரையும் முன்னேற்ற முடியும் குன்றக்குடி அடிகளார் பேச்சு

speech Kundrakudi adigalar

காரைக்குடி,-    காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில்(சிக்ரி) திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது. மூத்த விஞ்ஞானி ராஜசேகர் வரவேற்றார். சிக்ரி இயக்குநர் விஜயமோகனன் கே பிள்ளை தலைமை வகித்து பேசுகையில், “இந்தியாவில் 45 கோடி பேர் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இந்த இளைஞர்களின் சக்தியை கொண்டு தான் இந்தியாவை வளம்மிக்க நாடாக மாற்ற மத்திய அரசு சார்பில் “திறன் இந்தியா” திட்டம் துவங்கப்பட்டுள்ளது” என்றார்.

            குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், “வேலைவாய்ப்பு இல்லாத இடங்களில் தான் வன்முறை ஏற்படுகிறது. தகவல் துறை வளர்ந்துள்ளதற்கு ஏற்ப பணி களம் அமைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இன்றைய தேவை. தொழிற்கல்வி தான் அனைவரையும் முன்னேற்ற முடியும். இளைஞர்கள் புற்றீசல் போல் வெளிநாடுகளுக்கு செல்வது கட்டுப்படுத்தபட வேண்டும். இயற்கைவளம், மனிதவளம் மிக்க இந்த தேசத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.’ என்றார்.

            இந்திய அறிவியல் கழக பேராசிரியர் ஜெகப், போரசிரியர் நடராஜன், சிக்ரி முன்னாள் இயக்குநர் ராகவன், முன்னாள் துணை இயக்குநர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி அங்கப்பன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ