எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது., தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் 82 கோடியே 9 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 35 கோடியே 02 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் 5 கோடியே 06 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மரபணு பிரிவுக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 2025-ஆம் ஆண்டிற்கான மூன்று சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பைகளை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகளின் பயன்பாட்டிற்கென 27 கோடி ரூபாய் செலவில் 300 புதிய நான்கு சக்கர வாகனங்களையும், மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 60 புதிய வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்க, புதிய காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் காவலர்களுக்கு குடியிருப்புகள், பாதுகாப்பு பணிகளுக்காக ரோந்து வாகனங்களை கொள்முதல் செய்தல், காவல்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை காவல்துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்திடும் வகையில் 573.05 கோடி ரூபாய் செலவில் 3418 காவலர் குடியிருப்புகள், 73.65 கோடி ரூபாய் செலவில் 56 காவல் நிலையக் கட்டிடங்கள், 180.16 கோடி ரூபாய் செலவில் 31 காவல்துறை இதர கட்டிடங்கள் மற்றும் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின் கீழ் 55.19 கோடி ரூபாய் செலவில் 253 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம், காந்தி சாலையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டினார். சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பை, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பை வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான கலைஞர் காவல் கோப்பை மாநில அளவில் முதலிடம் பெற்ற விழுப்புரம் காவல் நிலையத்திற்கும், இரண்டாம் இடம் பெற்ற திண்டுக்கல் நகர காவல் நிலையத்திற்கும், மூன்றாம் இடம் பெற்ற பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கும் வழங்கி சிறப்பித்தார்.
காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவுகளுக்கான புதிய காவல் வாகனங்கள், காவல்துறை கட்டமைப்பை வலுப்படுத்தவும், அதன் செயல்திறனை மேம்படுத்தவும், மாநிலம் முழுவதும் உள்ள மாநகரங்கள், மாவட்டங்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பிரிவுகளின் பயன்பாட்டிற்கென 27 கோடி ரூபாய் செலவிலான 300 புதிய நான்கு சக்கர வாகனங்களையும், காவல் படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மோப்பநாய் பிரிவின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 60 புதிய வாகனங்களையும் தமிழ்நாடு முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


