முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவாரம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கான முன்னேற்பாட்டு பணி : கலெக்டர் பழனிசாமி ஆய்வு

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், ஆவாரம்பட்டி கிராமத்தில் இன்று நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்;சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

ஜல்லிக்கட்டு விழா

 

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை கால்நடைபாரமரிப்புத் துறை மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும்;, பங்கேற்கும் வீரர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும் என துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தில் சரியான முறையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டுக்கு மாடுகள் அனுப்புமிடம், கால்நடை பதிவு செய்யும் இடம், மாடு பிடிக்கும் இடம், பார்வையாளர்கள் இருப்பிடம், மாடுகள் வெளியே அனுப்பும் இடம், பொதுமக்கள் வந்து செல்லும் இடம், குடிநீர் வசதி உள்ளிட்ட செய்யப்பட்டு வரும் அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், மணப்பாறை காவல் துறை துணை கண்காணிப்பாளர் வனிதா, மணப்பாறை வட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணிதுறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்