முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் கால பயிற்சி குழுக்களுக்கு ரூ.55 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      கடலூர்
Image Unavailable

 

கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்ட அலகு, கொல்கத்தா ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் மற்றும் கடலூர் பிளஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய பேரிடர் கால பயிற்சியில் கலந்துகொண்ட 10 கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள பணி குழுக்களுக்கு ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் மூலம் தலா ரூ.55 ஆயிரம் மதிப்பிலான பேரிடர் காலத்தில் தேவைப்படும் உபகரணங்கள் அடங்கிய 10 பெட்டிகளை 24.03.2017 அன்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். ஆக்ஸ்பாம் நிறுவனம் மற்றும் கடலூர் பிளஸ் நிறுவனமும் இணைந்து கடலூர் மாவட்டத்தில் முன்னோட்டமாக கடந்த 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்புக்குட்பட்ட கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடபுரம் கிராமம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிநாராயணபுரம், பொட்டகரைமேடு கிராமங்கள், மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பின்னலூர், அம்பாள்புரம், வடதலைகுளம் மற்றும் கொளக்குடி கிராமங்கள், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேளப்;பாடி, கரைமேடு மற்றும் சி.மேலவன்னியூர் கிராமங்கள் ஆகிய 10 கிராமங்களை தேர்தெடுத்தது. இக்கிராமங்களில் முன்னெச்சரிக்கை அணி, இடம்பெயர்வு அணி, பாதுகாப்பு மைய பராமரிப்பு அணி, தேடுதல் மற்றும் மீட்பு அணி மற்றும் முதலுதவி அணி என 5 பணிக்குழுக்களை அமைத்தது.மேற்கண்ட 10 கிராமங்களில், ஒவ்வொரு கிராமங்களிலும் மேற்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ள 5 பணிக்குழுக்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சமுதாய அடிப்படையிலான பேரிடர் அபாய மேலாண்மை திட்ட அலகு, கொல்கத்தா ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் மற்றும் கடலூர் பிளஸ் நிறுவனம் ஆகியவற்றால் பேரிடர் கால பயிற்சி 12.03.2017 முதல் ஒரு வாரகாலம் நடத்தப்பட்டது. இக்குழுக்கள் மூலம் அக்கிராமங்களின் பேரிடர் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அந்த அறிக்கைகளை கலெக்டர் அவர்களிடம் 24.03.2017 அன்று ஒப்படைத்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இக்குழுக்களுக்கு கலெக்டர் ஆக்ஸ்பாம் நிறுவனம் மூலம் தலா ரூ.55 ஆயிரம் மதிப்பிலான பேரிடர் கால நேரத்தில் தேவைப்படும் உபகரணங்களான போயா, லைப் ஜாக்கட், கயிறு, டார்ச் லைட், முதலுதவி பெட்டி, ரேடியோ மற்றும் ஸ்டெச்சர் ஆகியவைகள் அடங்கிய 10 பெட்டிகளை வழங்கினார். மேலும், கலெக்டர் இக்குழு உறுப்பினர்களை பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்கள் பகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த 18 மாதங்களாக வெள்ள நிவாரண பணிக்கு உதவிய ஆக்ஸ்பாம் பணியாளர்களுக்கு கலெக்டர் தனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவன நிர்வாக பொறுப்பு அலுவலர் மேதினிதாஷா, பிளஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் அந்தோனிசாமி, பேரிடர் மேலாண்மை அபாய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சல் கேத்தரின், ஆக்ஸ்பாம் பணியாளர்கள் பாட்டில், செல்வி நேகா, சுரேஷ் குலாம், ஜெரால்டு, சந்தோஷ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகமூர்த்தி மற்றும் பத்மாவதி, கிராம ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்