முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக் கல்லூரி 19 வது ஆண்டு விழா

சனிக்கிழமை, 25 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

புதிய தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டு  மாணவர்கள்  புதுமை படைக்க வேண்டும் என்று சேத்துப்பட்டு திவ்யா பாலிடெக்னிக்  கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவில் வேலூர் தொழிலாளர் நல  துணை ஆணையர் ஜெயபாலன் பேசினார்.   சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள திவ்யா பாலிடெக்னிக் கல்லூரியில் 19 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை  தாங்கினார். செயலாளர் டாக்டர் செந்தில் குமார், துணைத்தலைவர் பொறியாளர்  பிரவின்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், ஒருங்கிணைப்பாளர்  பிரதாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஆலோசகர் முருகன்  வரவேற்றார். முதல்வர் சண்முகம் ஆண்டறிக்கை வாசித்தார்.   விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட தொழிலாளர் நல துணை ஆணையர்  ஜெயபாலன் கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மை  கூடாது. எதிர் நீச்சல் போட மனோபலம் வேண்டும். மாணவ பருவம் துன்பம் இல்லாத  பருவம். ஆக்கபூர்வமாக சிந்தித்து படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்  புதிய தொழில் நுட்பத்தை கற்று வாழ்க்கையில் புதுமை படைக்கவேண்டும். இளமைக்காலம் வைகறை போன்றது. தொடர்ந்து படியுங்கள் படிப்பை நிறைவு  செய்யுங்கள். வாழ்க்கை பலாபழம் போன்றது உழைப்போம் வெற்றிபெறுவோம் என  பேசினார்.   மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தாளாளர்  பா.செல்வராஜன் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். முடிவில் மெக்கானிக்கல்  துறை பேராசிரியர் வெங்கிடேசன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago