நாமக்கல் மாவட்டம், தேவராயபுரம் மைதானத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017      நாமக்கல்
1 2

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தேவராயபுரம் ஜல்லிக்கட்டு மைதானத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (26.03.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ)ஜியா வுல்ஹக், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு உறுதிமொழியான தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான விதிமுறைகளுக்குட்பட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து சாதி, சமய, இன, வாட்டார பாகுபான்றி அனைத்து வீரர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு காளைகளை துன்புறுத்தாமல் அமைத்தியாக ஜல்லிக்கட்டு விளையாடுவோம் என இதன்மூலம் உறுதி கூறுகிறோம் என்ற உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயராஜ், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.இராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ம.இராமசாமி, நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்.தாமரைச்செல்வன், சேந்தமங்கலம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் பி.ரவிச்சந்திரன் உட்பட ஜல்லிக்கட்டு வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: