முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.95.55 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மு.கருணாகரன்,தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டர் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் அவர்களின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ், செங்கோட்டை கூட்டுறவு வசதி சங்கத்திற்கு, பொது சேவை மையத்திற்கு கணினி உபகரணங்கள் பெறுவதற்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், கடையநல்லூர் வட்டத்தைச் சார்ந்த முகம்மது அலி என்பருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையினையும், மாவட்ட தாட்கோ மூலம் 2016-2017ம் நிதியாண்டு செயல் திட்டத்தின் கீழ், 100 சதவிதம் மானியத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் கறவை மாடுகளும், 3 பயனாளிகளுக்கு ரூ.19,500/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும், ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் 5 ஆடுகளும், ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் பலசரக்கு கடை வைப்பதற்கும் ஆக மொத்தம் 11 நபர்களுக்கு ரூ.2.18 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை விடுதியில் தங்கி பயின்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் 3வது மதிப்பெண் 484 பெற்ற மாணவனுக்கு ரூ.5 ஆயிரத்திற்கான, காசோலையினையும், அறிவியல் பாடத்தில் 100 சதவிதம் மதிப்பெண்கள் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ.1000/-த்திற்கான காசோலைகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 8 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறையின் மூலம் 2015-2016ம் ஆண்டிற்கு சட்டப் பட்டதாரிகள் ஊக்கத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலைகளையும், 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த 3 மாணவ, மாணவியர்களுக்கு மொத்தம் ரூ.65,000/-த்திற்கான காசோலைகளையும், மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரிந்து காலஞ்சென்ற அரசு ஊழியர்களின் இரண்டு வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளையும், 2014ம் நிதியாண்டில் முன்னாள் படைவீரர் கொடிநாள் வசூல் சாதனை புரிந்த மாவட்ட அலுவலர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட வெள்ளி பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் மு.கருணாகரன்,வழங்கினார்கள்.முன்னதாக, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித் தொகை, பட்டா மாறுதல், குடிநீர், சாலை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் மற்றும் உயர் அலுவலர்கள் பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, விரைவில் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஆர்.விஜயலெட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, தாட்கோ, மாவட்ட மேலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் (வருவாய் பிரிவு) தேவர்பிரான் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்