முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் விவகாரத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் கிரிமினல் நடவடிக்கை கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      தூத்துக்குடி

துாத்துக்குடியில் கலெக்டர் பெயரில் கனிம வள உதவி இயக்குனர் தாது மணல் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 

தூத்துக்குடி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்களுக்கான நேர்காணல் 26ம் தேதி நடந்தது. அன்று இரவே மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 70 சத்துணவு அமைப்பாளர் பணிக்கும், 310 சமையல் உதவியாளர் பணிக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 199 மதுபானக் கடைகள் உள்ளது. இதில் நெடுஞ்சாலை அருகே 91 கடைகள் இருந்தன. இதில், 54 கடைகள் மூடப்பட்டுள்ளது. தற்போது அந்த கடைகள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிதது வருகிறார்கள். எனது அனுமதியின்றி பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் மதுக் கடைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 இடங்களில் உள்ள 30 தாதுமணல் குடோன்களுக்கு கடந்த 3 தினங்களுக்குமுன்பு சீல் வைக்கப்பட்டது. இதில், 4,55,245 மெ. டன். தாதுமணல் இருப்பு வைக்கப்பட்டது. மேலும், ஏற்றுமதிக்கு தயாராக இருந்த 2,702 தாது மணல் பேக்குககளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தாது மணல் பிரிக்கப்படாமல் கடற்கரையில் இருந்து எடுத்து வரப்பட்ட 3,12,344 மெட்ரிக் டன் மணலுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனியார் குடோன்களிலும் தாதுமணல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஆட்சியரின் (எனது) ஒப்புதல் பெறாமல், எனது பெயரில் சுங்க இலகாவிற்கு கனிம வளத்துறை சார்பில் ஒப்புதல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதை சுங்க இலாகா பரிசீலித்தபோது சந்தேகம் எழுந்ததால் விளக்கம் கேட்டுள்ளது. அது, கடிதம் அனுப்பிய கனிம வளத்துறை அதிகாரிக்கே சென்று விட்டது. பின்னர் மீண்டும் சுஙகத்துறை விளக்கம் கேட்டபோது கலெக்டர் பெயரில் அனுமதி வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். இதில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம், திட்டத்தின் மூலம் SULOGAN போட்டியில் வெற்றி பெற்ற சுப்பையா வித்யாலாயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி செல்வி.எஸ்.எல்சியா அவர்களுக்கு முதல் பரிசுக்கான ரூ.1000/=க்கான காசோலையினையும், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி செல்வி கோ.பெல்ஷா ஞானதேவகுமாரிக்கு இரண்டாம் பரிசுக்கான ரூ.500/=க்கான காசோலையும், சி.எம்.மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி செல்வி பொ.ஜெயசித்ராவுக்கு மூன்றாம் பரிசுக்கான ரூ.300/= மதிப்பிலான காசோலையும் மற்றும் சான்றிதழ்களையும்இ தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி பிரிவு கீழ் தமிழ்நாடு இந்திய குழந்தைகள் நல வாரியத்தால் நடத்தப்பட்ட ஒவியப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற செல்வன் கண்ணனுக்கு ரூ.1000/=த்திற்கான காசோலையும், இரண்டாம் பரிசு பெற்ற மாணவன் செல்வன் ஜான் யாபேஸ்க்கு, ரூ.200/=க்கான காசோலையும் மற்றும் சான்றிதழ்களையும் போட்டிகளில் பங்கேற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும், மேலும் ஒடிசா மாநிலம், சம்பல்பூர் மாவட்டம், குச்சிந்தா வட்ட பகுதியில் நீரில் மூழ்கி இறந்த தூத்துக்குடி வட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த ஜான்சன் பெர்னான்டோ என்பவருக்கு சம்பல்பூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வரப்பெற்ற முதலமைச்சரின் பொது நிவாரண நிதி ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை அன்னாரின் மனைவி திருமதி.மரிய பாத்திமா சிறிய புஸ்பம் என்பவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் வழங்கினார்கள்;.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்