தி.மலை சண்முகா கல்லூரி ஆண்டு விழா 400 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 மார்ச் 2017      திருவண்ணாமலை
photo05

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் 20வது ஆண்டுவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைவர் எம்.என்.பழனி தலைமை தாங்க, செயலாளர் என்.குமார் முன்னிலை வகித்தார். கல்விப்புயல் முதன்மையர் அழ.உடையப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். முதல்வர் கே.ஆனந்தராஜ், ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற 100 மாணவ மாணவிகளுக்கும், 400 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணையினையும் வழங்கி விழா பேருரையாற்றினார். இந்த விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.எத்திராஜன், பி.இராமச்சந்திர உபாத்யாயா, எம்.சண்முக சுந்தரம், ஜி.புல்லையா, எஸ்.என்.சௌந்தர்ராஜன், பி.ஏ.எஸ்.முத்து, சீனி.கார்த்திகேயன், எம்.சீனுவாசன், எல்.விஜய்ஆனந்த், ஏ.என்.இ.திருநாவுக்கரசு, ஏ.சாந்தகுமார், ஏ.டி.பி.எஸ்.கஸ்தூரி அம்மாள், மணிமொழி முத்துசாமி மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பொருளாளர் கோ.இராஜேந்திரகுமார் நன்றி கூறினார். இன்று காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் 11வது பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து விழா பேருரையாற்றுகிறார்.

 

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: