முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் கணினி பயன்பாடு தொடர்பான போட்டிகள்.

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் கணினி பயன்பாடு தொடர்பான போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் பி.இ கணினிஅறிவியல் துறை சார்பில் கணினி பயன்பாடு வளர்ச்சி தொடர்பான போட்டிகள் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, தனிஅலுவலர் டி.பிரபு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணினித்துறை தலைவர் டி.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். மேலும் இதில் குடியாத்தம் கே.எம்.ஜி கலைக்கல்லூரி கணினித்துறை பேராசிரியர் எல்.சங்கர்கணேஷ் கலந்துகொண்டு மாணவர்களிடையே ஊக்கப்படுத்தி பேசியது, இன்றைய கணினி மையமான உலகில் கணினி சார்ந்த அறிவு மற்றும் பயன்பாட்டின் தேவை பன்மடங்கு வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு கணினி பயன்பாட்டிற்கு தேவை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் அதன் பயன்பாடு மற்றும் நுண்ணறிவு என்ற தலைப்பில் நடைபெறும் இந்த போட்டிகள் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகவும் இதுபோன்ற போட்டிகளை மற்ற கல்லூரிகளும் நடத்த வேண்டும். மேலும் வரும் ஆண்டில் கணினித்துறை சார்ந்த 10லட்சம் பொறியாளர்கள் நாடு முழுவதும் தேவைப்படுவர் என்று பேசினார். இதில் திறம் வளர்ப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துறைப்பேராசிரியர்கள் மற்றும் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் துறை பேராசிரியர் என்.கார்த்திக் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்