10 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை கலெக்டர் டி.பி.ராஜேஷ் வழங்கினார்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      கடலூர்
handicapped bus pass issue cuddalue collector 2017 03 29

2017-18 ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, கடலூர் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கடலூர் மாவட்டம் முழுவதும் இலவசமாக பயணம் செய்ய 2017-18ம் ஆண்டிற்கு புத்தக வடிவிலான பேருந்து பயணச் சலுகை அட்டையினை கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ், 28.03.2017 அன்று 10 பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இலவச பேருந்து பயணச் சலுகை அட்டையினை பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின்போது மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி உடனிருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: