முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் ஒரு நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 29 மார்ச் 2017      விழுப்புரம்

 

விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பாக ஒரு நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை முகாமை கலெக்டர் இல.சுப்பிரமணியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் இலாபத்தில் இயங்கும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்திருப்பதற்கான காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.அப்போது, குறைவான நட்டத்தில் இயங்கும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை இலாபத்தில் இயங்கிட செய்ய அரசு முதன்மைச் செயலர், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அவர்களால் அறிவுரை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 2017 இறுதிக்குள் சிறிய அளவில் ரூ.1.00 இலட்சம் மற்றும் ரூ.2.00 இலட்சம் விற்பனையாகும் வகையில் சிறிய அளவில் ஆங்காங்கே கைத்தறி கண்காட்சிகள் நடத்துவதன் மூலம் விற்பனை அதிகரித்து நட்டம் குறைய வாய்ப்பிருப்பதால் சிறு சிறு கண்காட்சிகள் நடத்தி தேக்கமடைந்திருக்கும் இரகங்களை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சரக துணை இயக்குநர்கள்ஃ உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, ஒவ்வொரு சரகத்திலும் குறைந்தது 2 சிறிய அளவிலான கைத்தறி கண்காட்சி விற்பனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, விழுப்புரம் மாவட்த்தில் செயல்பட்டு வரும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், சிறிய அளவிலான கைத்தறி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, கலெக்டர் இல.சுப்பிரமணியன், சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார். இவ்விழாவில், வாழப்பட்டு பாலமுருகன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், ஸ்ரீ சக்தி விநாயகர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், ஸ்ரீ சண்முகானந்தா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், திருப்பூர் குமரன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், ஸ்ரீமோஷ்ணம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், மோட்சகுளம் லட்சுமி கைத்தறி பட்டு நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், வெங்கடேஸ்வரா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், கோவுலாபுரம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், கெடார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், குண்ணகம்பூண்டிபுதூர் பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், முத்தமிழ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் போன்ற 50க்கும் அதிகமாக கூட்டுறவு சங்கங்கள் இந்த விற்பனை கண்காட்சியில் கலந்து கொண்டனர். மேலும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் அகமதுராஜா, துணிநூல் கட்டுப்பாட்டு அலுவலர் வேலாயுதம், கைத்தறி அலுவலர் ரமேஷ், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மேலான் இயக்குநர்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்