அழகப்பாமாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு நூல்கள் - புத்தக அலமாரிகள்

alagappa school

காரைக்குடி:- அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்களின் வழிகாட்டுதலின்படி, அழகப்பாபல்கலைக்கழக ஆசிரியா ;பேரவையின் சார்பில் ரூபாய் 1.6 லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் நூல்கள் வைப்பதற்கான புத்தக அலமாரிகள் அழகப்பாமாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு துணைவேந்தர் தலைமையில் வழங்கப்பட்டது.

அழகப்பாமாதிரி மேல்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் முனைவர் எஸ். அருணாச்சலம் அவர்களிடம் நூல்களை வழங்கி துணைவேந்தர் சிறப்புரையாற்றினார்.  அவர் தமது உரையில், ஒருகல்வி நிறுவனத்தை மதிப்பீடு செய்வதற்கு, அங்கு நிறுவப்பட்டுள்ள நூலகமே அளவுகோலாக அமையும் என்றார். ஒரு புத்தகம் ஒரு மாணவனின் எதிர்காலத்தையேமாற்றி அமைக்கும் என்றும், அதனால் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தருவது ஒருசிறந்த தொண்டு என்றும் குறிப்பிட்டார். இப்பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் பயன் அடைவதற்காகவே 900 புத்தகங்கள் அழகப்பாபல்கலைக்கழக ஆசிரியர் பேரவையின் சார்பில் கொடையாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது என்றார். அழகப்பாபள்ளியில் பயிலும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால், அவர்களுக்கு உதவி செய்தால் அது பொருத்தமாக இருக்கும் என்று கருதியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார். உதவியாருக்குத் தேவைப்படுகிறதோ, அவர்களுக்குச் செய்யவேண்டும் என்றார். அவ்வகையில், 6-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்புவரைபயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு, பல்வேறு தலைப்புகளில் எளியதமிழிலும், ஆங்கிலத்திலும் அழகப்பாபல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து இதுவரை மொத்தம் 4500 புத்தகங்களை அழகப்பாமாதிரி மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் இந்த முயற்சியை துணைவேந்தர் வெகுவாகப் பாராட்டினார்.

அழகப்பா ஆசிரியர் பேரவைத் தலைவர் பேரா. சு. இராசாராம், அனைவரையும் வரவேற்றார். இணைப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பேரவைச் செயலர் முனைவர் ஆறுமுகம் நூல்கள் பற்றிய அறிக்கை வழங்கினார். ஆசிரியர் பேரவை துணைத் தலைவர் சஞ்சீவ்குமார் சிங் நன்றி யுரையாற்றினார்.  மேலும், இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ