முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி டி-20 போட்டி மழையால் ரத்து: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

பிரிஸ்பேன் : கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் (முதல் போட்டி மழையால் ரத்து) தொடரில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா - சுப்மன் கில் களமிறங்கினர்.

மோசமான வானிலை... 

ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இந்திய அணி 4.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் அடித்திருந்தபோது மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அபிஷேக் சர்மா 23 ரன்களுடனும், கில் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மழை நின்று, போட்டி மீண்டும் தொடங்கும் என ரசிகர்கள் மைதானத்தில் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

போட்டி ரத்தானது...

ஆனால் மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. இதன் காரணமாக போட்டி ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். முதல் போட்டியில் மழையால் பாதியில் ரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2, 3 மற்றும் 4-வது போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. கடைசி போட்டியில் ரத்துசெய்யப்பட்டதால், இந்திய அணி தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டியை வென்று தொடரை சமன் செய்துவிடலாம் என்று ஆஸ்திரேலிய அணியினர் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், அவர்களது ஆசை மழையால் நிராசையானது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து