முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டைகள் கலெக்டர் ச.ஜெயந்தி வழங்கினார்கள்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள்  நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2017-2018 - ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டைகளை மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி வழங்கினார்கள்.

          திருப்பூர் மாவட்டத்தில்,  ஒவ்வொரு நிதியாண்டும் ஏப்ரல் மாதம் முதல்  மார்ச் மாதம் வரை பயணிப்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு செல்வதற்கும், சிகிச்சைக்கு செல்வதற்கும் மற்றும்  சிறப்பு பள்ளிகளுக்குச் செல்வதற்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டில் இருந்து அவர்களின் தேவைக்கு ஏற்ப  இடங்களுக்குச் செல்ல  பேருந்து சலுகை அட்டையும், பார்வையற்றவர்களுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கு வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 2017- 2018 - க்கான பார்வையற்ற 155 மாற்றுத்தினாளிகளுக்கு தலா ரூ.7,000/- மதிப்பில்  ரூ.10,85,000/- மதிப்பிலான இவலச பேருந்து பயண அட்டைகளை மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.

          இந்நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்