சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள்: கலெக்டர் வா.சம்பத், வழங்கினார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      சேலம்
2

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெல்லான்டிவலசில் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை கலெக்டர் வா.சம்பத், நேற்று (01.04.2017) வழங்கி துவங்கி வைத்து தெரிவித்ததாவது : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பழைய ரேசன் குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கும் விழாவை நாளை முதல் துவங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் அதிகமாக புதிய மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளது. போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் நோக்கில் மின்னணு பதிவுகளின் அடிப்படையில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க தமிழக அரசால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தவுள்ளது.சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் 1,541 நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றனர். இதன் மூலம் 9,75,382 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். முதல் கட்டமாக 3,00,000 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு இவற்றில் 29,650 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வரபெற்று இன்று சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வெல்லான்டிவலசில் இன்று துவக்கிவைக்கப்படுகிறது.புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடபட்டவுடன் குடும்ப அட்டைதாரரின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தால் அவற்றை அழித்து விடாமல் நியாயவிலைக்கடைக்கு எடுத்துச் சென்று பதிவு செய்து பயன்பெறுமாறு தெரிவித்துகொள்ளப்படுகிறது. புதிய மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தல் ஆகிய பணிகளுக்காக பொதுமக்கள் வnயீனள.படிஎ.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ள வழிவகை செய்யப்படுள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்களின் இணைப்பதிவாளர் கோ.இரஜேந்திரபிரசாத் அவர்கள், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார் அவர்கள், மாவட்ட வழங்கள் அலுவலர் ராமதுரைமுருகன் அவர்கள், எடப்பாடி வட்டாட்சியர் சண்முகவள்ளி அவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், ஏராலமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: