முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் வழங்கினார்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017      விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு, மின்னணு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் விழுப்புரத்தில் தொடங்கி வைத்தார்.01.04.2017 முதல் தமிழக அரசால், நடைமுறையில் உள்ள ஆதார் அட்டையுடன் முழுமையாக இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு பதில், மின்னணு குடும்ப அட்டைகள் (ளுஅயசவ ஊயசன) அச்சிடப்பட்டு வழங்கும் பணி துவங்கியுள்ளது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கு, விழுப்புரம் வட்டத்தில் 8357, கள்ளக்குறிச்சி வட்டத்தில் 7785, உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 9146, சங்கராபுரம் வட்டத்தில் 8612 என மொத்தம் 33900 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றுள்ளன.மேற்படி வரப்பெற்ற மின்னணு குடும்ப அட்டைகள் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைபேசி எண்களை பதிவு செய்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு பிரத்யேக அடையாள எண் PஐN Nருஆடீநுசு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த குறுஞ்செய்தி (ழுவுP) எண் வரப்பெற்ற நாளிலிருந்து 7 நாட்கள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். கைபேசிக்கு குறுஞ்செய்தி பெறப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், குறுஞ்செய்தி வரப்பெற்ற 7 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு சென்று மின்னணு குடும்ப அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும், நிலுவையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை படிப்படியாக 31.05.2017-க்குள் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (பொ) அ.அனந்தராம், வருவாய் வட்டாட்சியர் பத்மா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆர்.கோவிந்தராஜ், விழுப்புரம் வருவாய் ஆய்வாளர் சாதிக், வட்ட வழங்கல் ஆய்வாளர் தயாநிதி, கூட்டுறவுத் துறை சார்பதிவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்