முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஸ்மார்ட் சிட்டிக்கான சின்னம் கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 

 

மதுரை.- மதுரை மாநகராட்சியின் சார்பில் முதல் முறையாக ஹேப்பி ஸ்டிரீட் நிகழ்ச்சி அண்ணாநகர் 80 அடி சாலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை ஸ்மாhட் சிட்டிக்கான சின்னத்தை (LOGO & TAG LINE) ஆணையாளர் சந்தீப் நந்தூரி, தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (02.04.2017) வெளியிட்டார்.

 

மதுரை மாநகராட்சி அண்ணா நகர் 80 அடி சாலையில் அம்பிகா திரையரங்கு முதல் சுகுணா ஸ்டோர் வரை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை சாலையின் இருபுறங்களிலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஸ்கேட்டிங், ஓவியம், சைக்கிளிங், ஜம்பிங் பால், ஸ்கிப்பிங், பேஸ்கட்பால், புட்பால், ஷெட்டில், ரோப் புல்லிங், கேரம்போர்டு, வாலிபால், ஸ்கூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களும் டான்ஸ், பிட்நெஸ் டான்ஸ், யோகா, சிலம்பாட்டம், லைவ்பேண்டு, கேம்ஸ்ஷோ உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளை பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேலும் மாநகராட்சியின் சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம், திடக்கழிவு மேலாண்மை, டெங்கு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்குதல், மழைநீர் சேகரிப்பு முறைகள் உள்ளிட்ட தற்காலிக அரங்குகள்அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

 

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சிறந்த சின்னம் மற்றும் இலக்கு உரை தயாரித்து அனுப்புமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கல்லூரி மாணவ, மாணவிகள், வடிவமைப்பாளர்கள், தனியார் நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்து சுமார் 300 சின்னம் மற்றும் இலக்கு உரை பெறப்பட்டது. இவற்றில் 7 சின்னம் மற்றும் இலக்குஉரை தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் வாக்கெடுப்பில் அதிக வாக்கு பெற்ற மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தேர்வு செய்த சிறந்த சின்னம் மற்றும் இலக்கு உரை இன்று ஆணையாளர் சந்தீப் நந்தூரி, தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப. அவர்களால் வெளியிடப்பட்டது.

 

மதுரை மாநகராட்சியில் ஹேப்பி ஸ்டீரிட் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை ஒரு குறிப்பிட்ட பகுதியில் இதுபோன்று தொடர்ந்து நடத்தப்படும். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பொதுமக்களுக்கும், பங்களிப்பாளர்களுக்கும் ஆணையாளர் சந்தீப்நந்தூரி, நன்றியை தெரிவித்தார்.

 

 

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப. மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி, நகரப்பொறியாளர் மதுரம், நகர்நல அலுவலர் மரு.சதீஷ்ராகவன், உதவி நகர்நல அலுவலர் மரு.பார்த்திப்பன், உதவி ஆணையாளர்கள் அரசு, செல்லப்பா, நகரமைப்பு அலுவலர் ஐ.ரெங்கநாதன், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், சந்திரசேகரன், சேகர், உதவி ஆணையாளர் (வருவாய்) ரங்கராஜன், உதவி ஆணையாளர் (கணக்கு) கருப்பையா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அலுவலர்கள், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மேலாளர்கள், எலிகண்ட் ஈவன்ஸ் நிறுவனத்தினர், பங்களிப்பாளர்கள், விளம்பரதாரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

 

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்