முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் : கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (02.04.2017) தொடங்கி வைத்தார்.

போலியோ சொட்டு மருந்து முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்ததாவது,

திவிர முயற்சி

 

 

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004ம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. உலக சுகாதார நிறுவனம் 27.03.2014 அன்று இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்து சான்று வழங்கியுள்ளது.

02.04.2017 இன்று இந்தியா முழுவதும் முதல் சுற்று தவணையாகவும், வருகின்ற 30.04.2017 அன்று இரண்டாம் சுற்று தவணையாகவும் நடைபெறவுள்ளது.

 

ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து ஐந்து வயதிக்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயைப் பரப்பு வைரஸ் கிருமிகள் அவர்களது ஜீரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச் சூழலிருந்து அறவே ஒழிக்கலாம்.

இந்த முகாம்கள் மூலம் அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இது வரை 21 ஆண்டு போலியோ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

முகாமின் நோக்கமானது போலியோ நோயை மீண்டும் இந்தியாவில் வராமல் தடுப்பது ஆகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் முதலாவது சுற்றில் 2,50,240 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் 128 மையங்களும், ஊரகப் பகுதிகளில் 1382 மையங்களும் ஆக மொத்தம் 1510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இப்பணியில் 6040 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருந்துவ அலவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

உபயோகப்படுத்தப்படும் போலியோ தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து குழந்தையை சென்று அடையும் வரை தடுப்பு மருந்தின் வீரியம் குறையாமல் குளிர் பதன தொடர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோயில்கள் சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இம்மையங்கள் அதிகாலை முதல் இரவு வரை செயல்படும்.

போலியோ நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் "இரண்டு சொட்டு" போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் அளிக்க வேண்டும். அருகிலுள்ள முகாமினை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.

பின்னர், மானம்புச்சாவடி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மற்றும் கீழவாசல் காவடிக்காரத்தெரு மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும் சொட்டு மருந்து மையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணி இணை இயக்குநர் டாக்டர் சிவசுப்ரமணியன் ஜெயசேகர், சுகாதாரப் பணி துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், மாவட்ட மலேரிய அலுவலர் டாக்டர் பேத்திபிள்ளை, மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்