முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி தொடங்கி வைத்தார்.

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமைப் பொது மருத்துவமணை யில் முனைப்பு போலியோ சொட்டு மருந்து முகாமினை  மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி   தொடங்கி வைத்தார்.

போலியோ  சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது

மிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக கடந்த 12 வருடங்களாக தமிழகத்தில் போலியோவினால் எந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இல்லை.  உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோய் இல்லாத நாடாக அறிவித்துள்ளது. ஒரே நாளில் நாட்டில் உள்ள அனைத்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நோயை பரப்பும் வைரஸ் கிருமிகள் அவர்களது சூரூரண மண்டலத்திலிருந்து அகற்றப்பட்டு அழிக்கப்படுகிறது.   இதன் மூலம் போலியோ நோயைப் பரப்பும் வைரஸ் கிருமிகளை சுற்றுச் சூழலில் இருந்து அறவே ஒழிக்கலாம். 1995-ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் துவக்கப்பட்டது.  இந்த முகாம்கள் மூலம் அனைத்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.  இது வரை 20 ஆண்டு போலியோ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், 1999 -ஆம் ஆண்டு முதல் முனைப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. முதல் நாள் முகாமில் அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ  சொட்டு மருந்து வழங்கப்பட்டு அடுத்த இரு நாட்களில் விடுபட்ட குழந்கைளுக்கு வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறும். ஆனால் முதல் நாள் முகாமிலேயே பெற்றோர்கள் தவறாமல் தங்களது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு

 போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு வழங்கப்பட்டதன் விளைவாக 1998 முதல் இம்மாவட்டத்தில் போலியோ நோயினால் யாரும் பாதிக்கப்படவில்லை.

இவ்வருடம் 2017-க்கான  முனைப்பு  போலியோ  சொட்டு  மருந்து  முகாம்  முதல் தவணை   இன்று (02-04-2017 ) நடைபெறுகிறது. மற்றும் இரண்டாவது தவணை 30-04-2017 நடைபெற உள்ளது.  இப்போலியோ சொட்டு மருந்து முகாம் 13 வட்டாரங்களில் 1075 மையங்களும் மற்றும் 54 நடமாடும் குழுக்களும் மற்றும்   பேருந்து  நிலையங்கள்  மற்றும்  ரயில்  நிலையங்களில்  25  மையங்களில்  (3 நாட்களுக்கு) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு 2.21 இலட்சம் குழந்தைகள் உள்ளார்கள் என கணக்கீடு செய்யப்பட்டு 2.6  இலட்சம் (னுழளநள) போலியோ சொட்டு மருந்து பெறப்பட்டுள்ளன. இடம் விட்டு இடம் பெயர்வோர், மக்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் மற்றும் சாலையோரங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கிடும் வகையில் நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஓவ்வொரு முகாம்களுக்கும் 4 பணியாளர்கள் வீதம் 4444 பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்குபவர்களும், 136  மேற்பார்வையாளர்களும்  இப்பணியில்  மேற்கொண்டுள்ளனர்.  என மாவட்ட கலெக்டர்  தெரிவித்தார்கள்.

                 இந்நிகழ்வின்போது , சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு) பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை  இணை இயக்குநர் மரு.விஜயகுமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.ஜெயந்தி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கேசவன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்