முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

                                       117 மனுக்கள்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, வங்கிக்கடனுதவி,முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 117 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார். அதோடு கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்த துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் அறிவுறுத்தினார்.

                                  இரண்டாம் உலகப்போர்

இம்மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் மகள்களின் திருமண நிதியுதவியாக நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 5 நபர்களுக்கு ரூ.1 லட்சமும், மாவட்ட அளவில் 2016_2017ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரத்திற்கான காசோலையையும், ஒரு மகன், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை ராணுவப்பணிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு போர் பணி ஊக்க மானியமாக 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரமும், இரண்டாம் உலகப்போர் ஆயுட்கால கைம்பெண் நிதியுதவி மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் இரண்டு பேருக்கு ரூ.6 ஆயிரமும் என ஆக மொத்தம் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

                                              நலிவுற்ற குழந்தைகள்

ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் பள்ளி பயிலும் 42 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சத்து 4 ஆயிரத்திற்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் (மனுக்கள்) பரமசிவம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரத்தினம், உதவி ஆணையர்(கலால்) முருகன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்