முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      கன்னியாகுமரி

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்  தலைமையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்டரங்கில்  நடைபெற்றது திங்கட்கிழமை தோறும்; கலெக்டர் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு குறைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மானியத்துடன் வங்கி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2016-17-ம் ஆண்டின்கீழ், சுயவேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ், 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,90,000ஃ- மானியமாக வழங்கப்படுகிறது.   இதற்கான ஆணைகளையும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், (ருலுநுபுளு)                           2016-17-ம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர்  கணபதிராஜா என்பவரின் பங்குதொகையினை அரசால் ரூ.23,150ஃ-வழங்கப்படுகிறது. அதற்கான காசோலையினையும், ஏழுதேசம் சி கிராமம், 24ஃ662, தென்கலிங்கராஜபுரம் என்ற இடத்தை சார்ந்த ராஜன் என்பவர், விளவங்கோடு வட்டம், இரவிபுத்தன்துறை கடற்கரையில் 28.10.2015 அன்று கடல் அலையினால் இழுத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்தார்.  அன்னாரது தாயார் பெ. பிச்சி என்பவரிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினையும் கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்    நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்  சோ. இளங்கோ, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  எம். சந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  கே.பி. பிரம்மநாயகம், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர்  கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்