முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வுக் கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 4 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சீமை கருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது :- தருமபுரி வட்டத்தில் மாதாந்திர வங்கியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் சீமைகருவேல மரத்தை அகற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு வங்கியாளர்கள் தங்கள் சமூக பொறுப்பு நிதியிலிருந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள். மேலும் இதன் தொடர்பாக சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கான (மாவட்ட பொறுப்பாளர்) வழக்கறிஞர் குமரவேலன் (ஆணையாளர்) அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற – மதுரை கிளையின் உத்தரவினை ஏற்று நமது மாவட்டத்திற்கு சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கலெக்டர் ஏப்ரல் 01.04.2017 முதல் பொது விநியோக திட்டத்தின்கீழ் ஸ்மார்ட் அட்டை பெறுவதற்கான வசதியினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளம்பர பதாகைகளை வெளியிட்டு வங்கியாளர்கள் தங்கள் கிளைகளில் விளம்ரப்படுத்த வேண்டுமென கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், நபார்டு வங்கி மேலாளர் பார்த்தசாரதி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஆர்த்தி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சூரிய நாராயணன், உதவி பொது மேலாளர் ரவீந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்