முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியோடு பண்புள்ள மாணவர்களை உருவாக வேண்டும் கோபி சாரதா இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர் பேச்சு.

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      ஈரோடு
Image Unavailable

கல்வியோடு பண்புள்ள மாணவர்களை உருவாக வேண்டும் கோபி சாரதா இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர் பேச்சு.

கோபி சாரதா இண்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டுவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இண்டியா லிமிடெட்ன் இயக்குனரும்இ சச்சிதானந்தா ஜோதி நிகேதன் இணடர்நேஷனல் பள்ளியின் செயலருமானஇ சிந்தனைக் கவிதாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் மாநிலஇ தேசியஇ  சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேடடிங் மற்றும் வில்வித்தைப் போட்டிகளில் பதக்கம்  வென்ற மாணவர்களைப் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கிண்டர்கார்டன் முடித்த சிறார்களுக்கு பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர் கவிதாசன் பேசுகையில் மாணவர்களை ஊக்குவித்தால் அவர்களிடையே எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் பெற்றோர்கள் எவ்வாறு தன் குழந்தைகளை வளர்க்க வேண்டுமஇ அவர்களிடம் எப்படி நாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதையுமஇ    குழந்தைகளுக்கு படிப்பை மட்டுமே தருவதை விடுத்து நல்ல பண்புள்ள மனிதர்களாக்குவது முக்கியம் என்பது  போன்ற பல நல்ல கருத்துகளையும் எடுத்துரைத்தார்.  

இவ்விழாவில் நமது பள்ளியின் நிறுவனர் இராமகிருஷ்ணனஇ தாளாலர் பெருமாள்சாமிஇ செயலர் சீதாலட்சுமி இராமகிருஷ்ணனஇ சாரதா இண்டர்நேஷனல் பள்ளியின் உறுப்பினர் மௌதீஸ்வரனஇ ஆகியோர் விருந்தினரை வரவேற்றனர்.

மேலும் விழாவில் செயலர் சீதாலட்சுமி இராமகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார. பள்ளியின் முதல்வர் ஆண்டறிக்கை வாசித்தார் மற்றும்  பள்ளி நிர்வாக உறுப்பினர் மௌதீஸ்வரன் நன்றியுரை கூறினார் இவ்விழாவில் 1000 த்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்