முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி குட்செப்பர்டு பள்ளியில் இந்தியாவில் அதிக உயரத்திலான கிரிக்கெட் மைதானம்

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் இந்தியாவில் அதிக உயரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

                                   2250 மீட்டர் உயரத்தில்

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள எம்.பாலாடா பகுதியில் அமைந்துள்ளது குட்செப்பர்டு சர்வதேச பள்ளி. இப்பள்ளியில் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களும் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் டாக்டர் பி.சி.தாமஸ் தலைமை தாங்கினார். விழாவில் இந்தியன் ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து பேசிய பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது_

                              உயர்மட்ட குழு

இந்தியாவிலேயே ஊட்டி குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தான் அறிவிக்க வேண்டும். வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. 

அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் இந்திய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளார். இக்குழுவில் இந்தியா சார்பில் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், முன்னாள் வீரர்கள், விளையாட்டு சங்க பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு மூன்று மாதங்களுக்கு ஒரு கூடி தங்களது பரிந்துரைகள் தெரிவிக்கும். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள 28 விளையாட்டுகளை தேர்வு செய்து அதில் போட்டியிடும் வீரர்களின் திறனை மேம்படுத்தும். நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பதக்கங்கள் குறைவாக பெற்றாலும், 8 பிரிவுகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். வரும் போட்டிகளில் அதை மேம்படுத்த அனைத்து வகையிலும் ஆராயப்படும்.

                           இந்தியாவில் 2040ம் ஆண்டு

வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஒரு இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து 8 ஆண்டுகளுக்கு முன்னரே முடிவு செய்து விடுவார்கள். ஆகையால் தற்போதைக்கு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கான சாத்தியம் இல்லை. வரும் 2040ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வாய்ப்புகள் அதிகம். அது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்திய ஒலிம்பிக் சங்க செயல்பாடுகளுக்கு உத்வேகம் அளிப்பதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆதரவு அளிப்பதோடு தேவையான நிதியுதவியையும் அளித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு திறமைதான் முக்கியம். அவர்களுக்கு அரசு மூலம் தேவையான நிதியுதவி கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இவ்விழாவில் பள்ளியின் நிர்வாக குழு தலைவரும் முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டருமான வி.செல்வராஜ், பள்ளியின்

போர்ட் ஆப் கவர்னர்ஸ்  மற்றும் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர்களுமான கே.எஸ்.ஸ்ரீபதி, தேவேந்திரநாத் சாரங்கி, சென்னை டிரைகின் டெக்னாலஜிஸ் நிறுவன சேர்மன் கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளியின் தலைமை துணை முதல்வர் எலசம்மா தாமஸ், துணை முதல்வர்கள் ஜூலி பிரதீஸ், பிரிகேடியர் சுரேஷ் குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தனஞ்செயன், முதல்வரின் செயலர் மனோஜ் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் இசை நிகழ்ச்சி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago