முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் மாவட்டம் வல்லூர் ஊராட்சியில் ஊராட்சி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக குடிநீர் இணைப்புகள் அகற்றும் பணி : கலெக்டர் நிர்மல் ராஜ் நேரில் ஆய்வு

புதன்கிழமை, 5 ஏப்ரல் 2017      திருவாரூர்
Image Unavailable

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் வல்லூர் ஊராட்சியில் ஊராட்சி அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக தன்னிச்சையாக பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்புகள் அகற்றும்; பணியினை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

துண்டிப்பு

 

 

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகள் , 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக தன்னிச்சையாக வீட்டுக்குள் குடிநீர் இணைப்புகள் எடுத்து உள்ளதை கண்டறிந்து குடிநீர் இணைப்பு துண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது.கோட்டூர் ஊராட்சி ஒன்றியம் வல்லூர் ஊராட்சியில் கோவிந்தநத்தம் கிராமத்தில் 31 சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் உள்ளதை கண்டறிந்து குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் மாவட்டத்தில் சட்டவிரோதமாக உள்ள குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கள ஆய்வு செய்து குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்படும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.தங்குதடையின்றி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் செல்வசுரபி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராஜசேகர் , வட்டார வளர்ச்சி அலுவலர் தேவராஜன் , வெங்கடேசன் . மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்