முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செஞ்சியில் நீர் ஆதாரத்தை அதிகபடுத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம்

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      விழுப்புரம்

செஞ்சி மற்றும் செஞ்சி பகுதிகளில் நீர் ஆதாரத்தை அதிகபடுத்துவது குறித்த  ஆலோசனைக்கூட்டம் ஞாயிறு அன்று நடைபெற்றது. செஞ்சியை சேர்ந்த வணிகர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிபோய் உள்ளது.தற்போது செஞ்சி மற்றும் அல்ல தமிழ்நாடு முழுக்க குடி நீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செஞ்சியில் கடும் குடி நீர் மற்றும் நிலத்தடி நீர் பற்றாக்குறையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீர் ஆதாரத்தை பெருக்கவது எப்படி என்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தினை தொழில் அதிபர்கள் கேசவன், ரங்கராஜன் மற்றும் வழக்குரைஞர் சக்திராஜன் உள்ளிடோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கூட்டத்தில் செஞ்சிக்கு குடிநீருக்கும், நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக விளங்கி வரும் பி.ஏரி, நவாப்பு குளம், சிறுகடம்பூர் ஏரி, பொன்பத்தி ஏரி, சத்திரதெருவில் உள்ள குளம், அருணாச்சலஈஸ்வரர் கோயில் குளம், செஞ்சிக்கோட்டை அகழிகள் ஆகியவற்றை தூர் வாரி, புணரமைத்து, பாதுகாப்பு அரண் அமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் வரத்திற்கான ஏற்பாடுகளை செய்து செஞ்சி நகரத்திற்கு நிலையான நிலத்தடி நீரையும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி நீர் பாசன வசதிகளை ஏற்படுத்துவது என கருத்து தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பணிகளை மேற்கொள்வது என தெரிவிக்கப்பட்டது.கூட்டத்ல் செஞ்சியை சேர்ந்த தணிகாசலம், குரோஷி, முகம்மதுஅஷ்ரப், வாசுகார்த்திகேயன், வர்த்தகர் சங்கல தலைவர் செல்வராஜ், குறிஞ்சிவளவன், வெங்கட்,மொய்தீன்பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்