முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் பள்ளியில் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் சங்கர். தொடங்கி வைத்தார்.

வியாழக்கிழமை, 6 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் பள்ளியில் இன்று மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் அவர் தொடங்கி வைத்து பேசியதாவது,

      இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள். நாட்டின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை மிக்கவர்கள். அதே போல் நாட்டின் விலை மதிக்க முடியாத செல்வம் எதுவென்றால் அது மனித வளம் ஆகும். இன்று கூட நாசா விஞ்ஞானிகளில் அதிகமானவர்கள் இந்தியர்கள் தான் என்பது பெருமை. மனித வளத்தை பெருக்குவது கல்வியும், பயிற்சியும் தான். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து விட்டு இங்கு வந்திருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு எவ்வளவு மனஅழுத்தம் இருக்கும் என தெரியும். எல்லோரும் நன்றாக படி இதுதான் வாழ்க்கை என கூறுவார்கள். அதுதான் உண்மை. ஏனென்றால் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பு ஒரு திருப்பு முனை. அதற்காக மதிப்பெண் சற்று குறைந்து விட்டதா அதற்காக கவலைபடாமல் அடுத்தது என்ன செய்யவேண்டும் என யோசிப்பதே புத்திசாலிதனம்.

        இம்மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் மிகவும் அழகாக, அறிவாக, ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்பதற்காக கருவை வளர்ப்பதற்காக கருணை தொகை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு கிரயான்ஸ், கலர்பென்சில், அட்லஸ், நோட்டு புத்தகம், 4 செட் யூனிபார்ம், ஜாமெண்ட்ரி பாக்ஸ், கல்வி உதவி தொகை, ஊக்கத்தொகை, தங்குவதற்கு விடுதிகள், உணவு, சைக்கிள் என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. ஒரே வகையான கலவை சாதத்தை சாப்பிடுவது மிகவும் கடினம் எனவே தான் மறைந்த முன்னாள் முதல்வர்  மாணவ, மாணவியர்களுக்கு 13 வகையான உணவுகள் வழங்கினார். மேலும் தமிழக இளைஞர்கள் எந்த நாட்டு இளைஞர்களுக்கும் சளைத்தவர்களாக இருக்க கூடாது என்ற நல் எண்ணத்தில் தான் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை வழங்கி மகிழ்வித்தவர் தான் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் .

          மேலும் இதுநாள் வரை நாம் எப்படி இருக்க வேண்டும். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது, யாருடன் பழக வேண்டும், யாருடன் பழக கூடாது என கூற பெற்றோர்கள் பாதுகாப்பு அரணாக இருந்தார்கள். ஆனால் இனி வரும் காலங்களில் உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களை பாதுகாக்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் போது நல்ல ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும். எந்த நேரத்திலும் சுய கட்டுப்பாட்டை இழந்து விட கூடாது. அதே போல பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர்களுக்காக பாடுபட வேண்டும். எனவே ஒரு நாட்டிற்கு ஒருமாநிலத்திற்கு மிகவும் முக்கியமானது கல்வி ஆகும். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தான் தமிழக அரசு கல்விக்கு வருடத்திற்கு ரூ. 21 கோடி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நமது மாநிலம் நூறாண்டுகளாக திட்டமிட்டு நமக்கு நல்ல கல்வியை வழங்கியுள்ளது என்பது நமக்கெல்லாம் பெருமை. எனவே மாணவ, மாணவியர்களிடையே பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வாழ்வில் முன்னேறலாம்.

எனவே தான் மாநில அரசு ஏழை, எளிய மாணவியர்கள் உதவிடும் வகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவ,மாணவியர்களுக்கு என்னென்ன படிப்பு படிக்கலாம், எந்ததெந்த கல்லூரிகள் உள்ளன, எந்தெந்த பாடபிரிவுகள் உள்ளன. என்ன படித்தால் எந்த வேலைக்கு போகலாம். எந்த படிப்பு படித்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்று எடுத்து கூற இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் பல்வேறு படிப்புகள் குறித்த கையேடுகளும் வழங்கப்படுகிறது. இந்த மேற்படிப்பு வேலைவாய்ப்பு சார்ந்த கருத்தரங்கின் மூலம் 6,000  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களும், 4,000 பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களும் பயன் பெறுவர்.

இந்தியர்கள் அனைவரும் பிறவியிலேயே மேதைகள். எனவே பிறவி மேதைகளாகிய நாம் நல்ல ஒழுக்கத்துடன் கடுமையாக உழைத்து திட்டமிட்டு உயர்படிப்பு படித்து இந்த நாட்டிற்கு நன்மை செய்யும் நல்ல குடிமகன்களாக வர வேண்டும் என மாவட்ட கலெக்டர்  கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உதகை கோட்டாட்சியர் கே.கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்