முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு - மனநல விழிப்புணர்வு பேரணியினை திருப்பூர் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

                  திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை, தென்னம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் உலக சுகாதார தினத்தினை முன்னிட்டு மாவட்ட மனநல திட்டம் சார்பில் பொது மக்களிடையே மனநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனநல விழிப்புணர்வு பேரணியினை  மாவட்ட கலெக்டர்  ச.ஜெயந்தி   இன்று (07.04.2017) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார்.

                ஆண்டு தோறும் உலக சுகாதார தினம் இன்று (07.04.2017) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருப்பூர் மாவட்ட மனநல திட்டம் சார்பில் மனநோய் பற்றிய பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனநல விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர்  கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் மனநோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பல்வேறு விளம்பர பதாகைகள் கையில் ஏந்தியவாறும் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறும் திருப்பூர் அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள், தாராபுரம் மகாராணி நர்சிங் கல்லூரி மாணவியர்கள் மற்றும் பாளையக்காடு எஸ.பி.எம். நர்சிங் கல்லூரி மாணவியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இப்பேரணியானது தென்னம்பாளையம்  மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடங்கி பல்லடம் சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை  வந்தடைந்தது.

              இந்நிகழ்வின்போது, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரம் இணை இயக்குநர் மரு.விஜயகுமார், மாவட்ட மனநல மருத்துவர் மரு.சுகன்யாதேவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்