முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முசிறி வட்டம், வேங்கைமண்டலம் கிராமத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி : கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேங்கைமண்டலம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 

விழிப்புணர்வு

 

தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணமாக அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அரசின் சாதனைகள், திட்டங்கள் பற்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக தொடர்ந்து வெளிவந்தாலும், இதுபோன்று மக்கள் கூடும் இடங்களில் புகைப்படக் கண்காட்சி அமைக்கும் போதுதான், திட்டங்கள் பொதுமக்களை எளிதாகச் சென்றடையும்.

இப்புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், பெண்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர், விலையில்லா அரிசி, திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், அம்மா உணவகம் மற்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட விபரங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.

இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஜானகி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி(வேளாண்மை), பாஸ்கரன்(சத்துணவு), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உதுமான்முகைதீன், மண்டல நுகர்பொருள் வாணிப மேலாளர் செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, மாவட்ட சமுக நல அலுவலர் உஷா, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலஅலுவலர் முத்துவடிவேல், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிரு~;ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சாமிநாதன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனே~;வரி, உதவி மகளிர் திட்ட அலுவலர் காமராஜ், முசிறி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும்; ஏராளாமான பொதுமக்கள் பலர் பார்வையிட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்