முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் சட்ட கல்லூரியில் “மின்னணு வழி வர்த்தக நுகர்வோர்களுக்கான பாதுகாப்பு குறித்த தேசியக் கருத்தரங்கம்

வெள்ளிக்கிழமை, 7 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

மின்னணு வழி வர்த்தக மூலம் வெவ்வேறு விதமான பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணச் சட்டரீதியான பாதுகாப்பு அவசியம்; இதற்கேற்ப சட்ட அம்சங்களை நிறைவேற்ற மத்திய – மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும் என்று சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் தேசியக் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.இங்கு ‘மின்னணு வழி வர்த்தகம் – பொருட்கள் வாங்குவோருக்கான பாதுகாப்பு – பிரச்னைகள் குறித்து தேசிய நிலையிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்க்குத் தலைமை வகித்துப் பேசிய கல்லூரிச் செயலாளர் வழக்கறிஞர் D.சரவணன், இணைய வழி வர்த்தகம் செய்வோருக்கான பாதுகாப்பின்மை, அதற்காக வெவ்வேறு கோணங்களில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள், சட்டரீதியான பாதுகாப்புக் குறித்து சுட்டிக்காட்டிப் பேசினார்.இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து தமிழ் வர்த்தகச் சங்கத் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர் பேசியது ஒரு அடையாளக் கருவியாக, பண்ட மாற்றுக்கு ஈடாகப் பயன்படுத்தப்படும் பணம் மூலம் வர்த்தகம் பல்லாண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்துக்கு முன்பே நமது நாட்டின் வணிகம் வெளிநாட்டுத் தொடர்புகளோடு நடந்துள்ளது.குறிப்பாக வணிகத்தின் அரசர்களே நுகர்வோர்தான், வாடிக்கையாளர்களான அவர்கள் ஒவ்வொரு தொழிலின் அங்கமாக திகழ்பவர்கள் ஆவர். அரசு - நுகர்வோர் என்பதே இ – காமர்ஸ் அடைப்படை எனலாம்.தற்போது மின்னணு வழி வர்த்தகம் மூலம் பொருள்கள் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.பணமில்லா வர்த்தக நடவடிக்கைகள் தற்போது விரிவடைந்துள்ள சூழலில், இதன் மூலம் ஏற்படக்கூடிய நன்மை,தீமைகள், தீர்வுகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியமாகும்.மின்னணு வர்த்தகம் செய்வோருக்குப் பிரச்சினை எனில், சட்ட ரீதியாக அணுகுவதற்கு வாய்ப்பு, பாதுகாப்புச் சட்ட அம்சங்கள் உள்ளனவா என்பது தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினை; இதுகுறித்து சட்டக்கல்வி பயிலும் மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக யோசித்து, வெவ்வேறு ஆய்வுக் கட்டுரைகள் அளித்திருப்பது பாராட்டுக்குரியது.தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் நமக்குச் சிக்கல் நீடிக்கின்றது. இச்சூழலில் பொருளாதாரம், வணிகம் சார்ந்த நுகர்வோர் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு உருவாக்குவது காலத்தின் கட்டாயம் மற்றும் அவசியமும் கூட. சீனாவிற்கு அடுத்தபடியாக இணைய வழி வர்த்தகத்தில் இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது. ஆனால் பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு மாற்றம் ஏற்பட்டுள்ளது சுட்டிக் காட்டத்தக்கது. தற்போது இணையம் மூலம் மருந்துகள் வாங்குவதும் தொடங்கியுள்ளது.எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு வழிகாணக் கூடிய தொலைநோக்குச் சிந்தனை, அணுகுமுறை சட்டக்கல்வி மாணவர்களுக்கு அவசியம்.இவ்வாறு சோழ நாச்சியார் ராஜசேகர் பேசினார்.இ.காமர்ஸ் – நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், இணையவழி வர்த்தகமும் – நுகர்வோர் பிரச்சினைகளும், கிராமப்புறங்களில் மின்னணு வணிகம் ஏற்படுத்தும் பிரச்சினைகள், மின்னணு வர்த்தகத்தில் நுகர்வோர் அணுகுமுறை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள்சமர்ப்பிக்கப்பட்டன.பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்று தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். இதற்கான அமர்வுகள் தனித்தனியே நடைபெற்றது.இந்த அமர்வுகளுக்கு பேராசியர்.முனைவர்.பழனிவேலு, பெரியார் பல்கலைக்கழகம், சேலம், முனைவர்.கோபாலகிருஷ்ணன், முதல்வர், அரசு சட்டக் கல்லூரி,கோவை, பேராசியர்.முனைவர்.எபநேசர் ஜோசப், தமிழ்நாடு டாக்டர்.அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் கீதா, உதவிப் பேராசிரியர் (பொருளாதாரம்), அரசு கலைக் கல்லூரி, சேலம் ஆகியோர் தலைமை வகித்து ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பிட்டனர்.இத்தேசியக் கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் பேகம் பாத்திமா வரவேற்புரையாற்றினார். விழாவின் நிறைவாக ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் சோழ நாச்சியார் ராஜசேகர் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார். முடிவில் மாணிக்கவிநாயகம், உதவிப் பேராசிரியர் (சட்டம்) நன்றியுரை ஆற்றினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்