ஓசூர் அருகே கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கூட்டு ரோடு நவதி கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.மாதேவா அவர்களும், அவர் துணைவியார் கூட்டுறவு சங்க தலைவர் ஆஞ்சினம்மா அவர்களும் பொது மக்களுக்கு பிரியாணி உணவு அன்னதானம் செய்தார்கள். மிடிகிரிப்பள்ளி நண்பர்கள் சங்க இளைஞர்கள் மிக சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஓசூர் அருகே உள்ள மத்திகிரியில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று தேர்த்திருவிழா நடந்தது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு மேல தாளங்கள் முழுங்க பக்தர்கள் டிராக்டர்கள்,லாரியில் விமான அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். இது பார்ப்பவர்களை மெய் சிலிரக்க வைத்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பானகம்,நீர் மோர், அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் சுற்று வட்டார கிராமங்களான மத்திகிரி,நவதி,குருபட்டி,அந்திவாடி, பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: