தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழா, காதி விழா

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      திருவள்ளூர்

 

திருவள்ளுரில் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழா,யுகாதி விழா மண்டல தலைவர் எம்.சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மண்டல பொருளாளர் ஜே.கோவர்த்தனம்,மண்டலத் துணை தலைவர்கள் லோகநாதன்,சந்திரசேகர், வெங்கடேசன்,இணை செயலாளர்கள் மகேஷ்பாபு,சக்தி சேகர்,ரங்கநாதன்,மோகன், மாநில பிரதிநிதி அதிகத்தூர் எம்.எம்.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தமிழக விவசாயிகள்

மாநில நிர்வாகிகள் வெங்கடவிஜயன்,பிரபாகர்,மோகன்,வாசுதேவநாயுடு, கோவிந்தன், வேதகிரிநாயுடு,கோசல்ராம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.சிறப்பு அழைப்பாளர்களாக பஜரங் பொறியியல் கல்லூரி தாளாளர் எம்.ஜி.பாஸ்கரன், அ.தி.மு.க திருவள்ளுர் மாவட்ட கழக அமைப்பு செயலாளர் ரமணா ஆகியோர் பங்கேற்று தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க வளர்ச்சி குறித்தும்,டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,சங்கத்தை ஒற்றுமையாக ஆண்டாண்டாக செயல்படுத்தி வரும் மாநில தலைவர் கெங்குசாமி நாயுடு அவர்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்க ஆண்டு விழாவில் மண்டல மற்றும் நகர கிளை சங்கங்களின் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர்கள்,இளைஞரணியினர், மகளிரணியினர்,உறுப்பினர்கள்,திருவள்ளுர் மண்டல நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: